'லால் சிங் சட்டா' வெளியீட்டுத் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

ஆமிர் கான் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சிங் சட்டா' படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளது.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.

தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். மார்ச் மாதம் ஊரடங்குக்கு முன் வரை டெல்லி, ராஜஸ்தான், சந்தீகர், அம்ரிஸ்தர், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. எல்லையில் சீன ராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக லடாக்கில் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்தியாவில் படப்பிடிப்புக்குத் தோதான சூழல் இல்லை என்பதால் துருக்கியில் படப்பிடிப்பைத் தொடர படக்குழு முடிவு செய்து அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தப் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் தற்போது இதன் வெளியீடு அடுத்தாண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகவுள்ளது.

'லால் சிங் சட்டா' படத்தின் வெளியீட்டை ஓர் ஆண்டுக்கு படக்குழு மாற்றியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்