சுஷாந்த் மரண விவகாரம்: ரியா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு

By ஐஏஎன்எஸ்

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை ரியா உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவி செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங், ரியா மீது பீஹார் போலீஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.

தற்போது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ரியா சக்ரபர்த்திக்கு எதிராக அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கவுள்ளது. அதன் முதற்கட்டமாக ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ரியா, அவரது தந்தை இந்திரஜித், தாய் சந்தியா, சகோதரர் ஷாவிக், சுஷாந்த்தின் மேனேஜர் சாமுவேல் மிரான்டா, ஷ்ருதி மோடி உள்ளிட்ட ஆறு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக கே.கே.சிங் அளித்திருந்த புகாரை ஆதாரமாக வைத்து விசாரிக்க வேண்டும் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் பீஹார் அரசின் பரிந்துரையின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE