சல்மான் கான் நடிப்பில் உருவாகவுள்ளது 'டைகர் 3'. இதனை மனிஷ் சர்மா இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சல்மான் கான் நடிப்பில் உருவான படங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று 'ஏக் தா டைகர்'. கபீர் கான் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கத்ரீனா கைஃப், ரன்வீர் ஷோரே, க்ரிஷ் கர்னாட், ரோஷன் சேத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் 'டைகர் ஜிந்தா ஹே' என்ற பெயரில் உருவானது. யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை அலி அப்பாஸ் ஷேஃபர் இயக்கியிருந்தார். முதல் பாகம் அடைந்த வசூல் சாதனையை விட, 2-ம் பாகம் அதிக வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகத்தை உருவாக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விரைவில் யாஷ் ராஜ் நிறுவனம் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு படங்களின் தயாரிப்புகளை வெளியிடவுள்ளது. இதில் 'டைகர் 3' படமும் ஒன்று. இந்தப் படத்தை 'ஃபேன்' படத்தை இயக்கிய மனிஷ் சர்மா இயக்கவுள்ளார். இதுவரை இல்லாத அளவில் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
» ரஜினிக்கு ‘பில்லா’; கமலுக்கு ‘வாழ்வே மாயம்’; ஒப்பற்ற படங்களைத் தந்த கே.பாலாஜி
» கரோனா அச்சுறுத்தல்: ராணா - மிஹீகா பஜாஜ் திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள்
இதிலும் சல்மான்கானுடன் கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய கபீர் கானே, 3-ம் பாகத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது மனிஷ் சர்மா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago