பிரபல மராத்தி நடிகர் அஷுடோஷ் பக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32.
‘பகார்’, ‘இசார் தர்லா பக்கா’ உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்தவர் அஷுடோஷ் பக்ரே. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல மராத்தி நடிகையான மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று (29.07.20) மகாராஷ்டிர மாநிலம் கணேஷ் நகரில் உள்ள தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலில் பேரில் அங்கு வந்த போலீஸார் அஷுடோஷ் பக்ரேவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ள போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
» சுஷாந்த் தற்கொலை விவகாரம்: தன் மீதான விசாரணைக்கு தடை கோரி ரியா உச்சநீதிமன்றத்தில் மனு
» சன் டிவி ட்வீட்டினால் ஏற்பட்ட குழப்பம்: 'சித்தி 2' குழுவினர் விளக்கம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஷுடோஷ் பக்ரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மனிதன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறான் எனபதை அலசும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அஷுடோஷ் பக்ரேவின் மறைவுக்கு மராத்தி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago