கத்ரீனா கைஃப்பின் சூப்பர் ஹீரோ படத்தைத் தயாரிக்கும் நெட்ஃப்ளிக்ஸ்

By செய்திப்பிரிவு

நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் கத்ரீனா கைஃப் நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கவுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’, ‘டைகர் ஜிந்தாஹை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அலி அப்பாஸ் ஜாஃபர். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் கத்ரீனா கைஃப் நடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க ஜாஃபர் ஆயத்தமாகி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''இப்படத்தை முதலில் நானே தயாரிக்க எண்ணினேன். ஆனால், நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் இந்த படம் தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸை அணுகினேன். அவர்களுக்கு நான் சொன்ன கதை பிடித்துப் போகவே இப்படத்தைத் தயாரிக்கச் சம்மதித்தனர். இப்படம் இரண்டு பாகங்களாக நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும்.

தற்போது கதை உருவாக்கப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஊரடங்கு முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதும் உடனடியாகப் படவேலைகள் தொடங்கப்படும்''.

இவ்வாறு அலி அப்பாஸ் ஜாஃபர் கூறியுள்ளார்.

இந்த படம் மட்டுமல்லாது நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் இன்னும் 2 படங்களை இயக்க அலி அப்பாஸ் ஜாஃபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு படத்தில் பாடகர் திலிஜித் தோசான்ஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் 1984 பஞ்சாப் கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்