'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் இந்தி ரீமேக்கில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளையும் உடைத்தது. அல்லு அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயர் பெற்றது.
பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் இதன் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. சில நாட்களுக்கு முன்பு இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இந்தி ரீமேக் உரிமை இன்னும் அல்லு அரவிந்த்திடம் தான் இருக்கிறது என்றும் யாருக்கும் வழங்கவில்லை எனவும் படக்குழு தெரிவித்தது.
தற்போது, 'அலா வைகுந்தபுரம்லோ' இந்தி ரீமேக் முடிவாகியுள்ளது. ரோஹித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் நடிக்கவுள்ளார் என்றும், ஏக்தா கபூருடன் இணைந்து 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் தயாரிப்பாளர்களும் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் ஆர்யன் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருவதால், அதன் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 'அலா வைகுந்தபுரம்லோ' இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago