ரசிகர்களின் ஆசீர்வாதம், அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நடிகர் அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அபிஷேக்கின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா என அனைவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மும்பையின் நானாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் குடும்பத்தின் உடல்நலனுக்காகப் பிரார்த்தித்து வரும் ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்;
"எங்கள் நலனுக்காக நீங்கள் அனைவரும் தரும் ஆசீர்வாதம், அன்பு, பிரார்த்தனைகளை நான் ஏற்கிறேன். எஸ் எம் எஸ், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ப்ளாக் என சாத்தியப்படும் அனைத்து சமூக ஊடகங்கள் மூலமாகவும் இதைத் தெரிவித்து வருகிறீர்கள். உங்கள் அக்கறைக்கு நான் சொல்லும் நன்றிக்கு எல்லையில்லை. மருத்துவமனை விதிகள் அதிக கட்டுப்பாடுடையவை. இதற்கு மேல் என்னால் பகிர முடியது. அனைவருக்கும் என் அன்பு" என்று ட்விட்டரில் அமிதாப் பகிர்ந்துள்ளார்.
» பொதுத் தேர்வுகளில் 58 சதவீத மதிப்பெண்களே எடுத்தேன் - மாதவன் பகிர்வு
» ஓடிடியில் நேரடி வெளியீட்டுக்கு தயாரான அடுத்த வரிசை பாலிவுட் படங்கள்
மேலும் இறைவனைப் போற்றி ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தையும் பகிர்ந்துள்ளார். அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago