கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி தயாரிப்பாளர்களுமே கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.
ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், படங்கள் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை.
திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த மாதம் ‘தில் பெச்சாரா’, ‘லக்ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்)’, ‘சடக் 2, ஆகிய படங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் நேரடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.
» ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை - ஜெஃப் கோல்ட்ப்ளம் தகவல்
அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘லூடோ’, நவாசுதீன் சித்திக் நடிக்கும் ‘ராத் அகேலி ஹை’, தபு நடிக்கும் ‘எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட 17 திரைப்படங்கள் நெட்ப்ளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளன.
இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் துணைத் தலைவர் மோனிகா ஷெர்ஜில் கூறியுள்ளதாவது:
எங்கள் வாடிக்கையாளர்கள் தனித்துவமான ரசனை மற்றும் தேவை உடையவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். சில நேரம் அவர்கள் ஆசுவாசமாக சாய்ந்து கொண்டு வாய்விட்டு சிரிக்கவைக்கும் காமெடி படங்களை பார்க்க விரும்புவார்கள். சில நேரம் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் த்ரில்லர் படங்களை பார்க்க விரும்புவார்கள்.
எனவே பிரபல இயக்குநர்கள் உருவாக்கிய இது போன்ற பலதரப்பட்ட கதைகளை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago