வாரிசு அரசியல் என்ற வார்த்தையுடன் வேறு யாரையேனும் வம்பிழுக்கவும் என்று மகேஷ் பட்டின் மகள் பூஜா பட் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு நடிகர்கள், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புத் தருபவர்கள் எனப் பலரும் அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை தருவதாகவும், வெளியிலிருந்து வரும் கலைஞர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன,
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் 'சடக் 2'. இது 1991-ம் ஆண்டு அவர் இயக்கிய 'சடக்' படத்தின் இரண்டாவது பாகம். இதில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் என இருவரும் நடிக்கின்றனர். மகேஷ் பட்டின் சகோதரர் முகேஷ் பட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் ஆலியாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆதித்யா ராய் கபூரும், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரின் சகோதரர்.
பல்வேறு வாரிசுகள் இணைந்துள்ள இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர். இதனிடையே வாரிசு அரசியல் சர்ச்சை தொடர்பாக முதன்முறையாக பதிலளித்துள்ளார் மகேஷ் பட்டின் மகள் பூஜா பட். வாரிசு அரசியல் தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மக்கள் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிற வாரிசு அரசியல் பற்றி கருத்து சொல்லும்படி என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஒட்டுமொத்த திரைத்துறைக் காட்டிலும் ஏராளமான புதிய திறமையான நடிகர்களையும், இசையமைப்பாளர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்ணாக, என்னால் இதற்கு சிரிக்க மட்டுமே முடிகிறது. உண்மைகள் யாருக்கும் சென்றடைவதில்லை. மாறாக புனைவுகளே அதிகமாக சேர்கின்றன.
பட் குடும்பத்தினர் பிரபலமான நடிகர்களுக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகளும், புதியவர்களை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களோடு பணிபுரிந்ததால் ஒதுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று அதே மக்கள் வாரிசு அரசியல் செய்கிறார்களா? கூகிள் செய்து பார்த்துவிட்டு ட்வீட் செய்யுங்கள் நண்பர்களே. யோசித்துப் பேசுங்கள் என்று கூட சொல்லப் போவதில்லை.
கங்கணாவை பொறுத்தவரை அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை, இல்லையென்றால் அவர் 'கேங்ஸ்டர்' படத்தில் அவர் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க மாட்டார். ஆம், அனுராக் பாசு தான் அவரை கண்டுபிடித்தார், ஆனா விஷேஷ் பிலிம்ஸ் அவருக்கு உறுதுணையாக நின்று படத்துக்கு முதலீடு செய்தது. இது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய எல்லா முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.
'சடக் 2' படத்தில் கூட சுனில் ஜீத் என்கிற ஒரு புதிய திறமையாளருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலிருந்து ஒரு இசை ஆசிரியர் எங்கள் அலுவலகத்துக்கு எந்த சந்திக்க நேரம் கூட அனுமதி வாங்காமல் ஒரு ஆர்மோனியம், ஒரு கனவு, இஷ்க் கமால் என்ற ஒரு அற்புதமான பாடலுடன் வந்தார். அதை கேட்டதுமே பிடித்துப் போன என் தந்தை அவரை படத்துக்கு ஈர்த்து விட்டார்.
எனவே வாரிசு அரசியல் என்ற வார்த்தையுடன் வேறு யாரையேனும் வம்பிழுக்கவும். பல ஆண்டுகளாக நாங்கள் அளித்த வாய்ப்பின் மூலம் திரைப்படங்களில் தங்களுக்கான வழியை அமைத்துக் கொண்டவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும். அவர்கள் மறந்திருந்தால், அது அவர்களுக்குத் தான் நஷ்டம். எங்களுக்கல்ல"
இவ்வாறு பூஜா பட் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago