ஓடிடி தளத்தில் வெளியாகும் 7 பிரம்மாண்டப் படங்கள்

By செய்திப்பிரிவு

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 7 இந்திப் படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. அனைத்துமே போஸ்டர்களுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழித் தயாரிப்பாளர்களுமே கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இதனால் பலருமே தங்களுடைய படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள 'குலாபோ சிதாபோ' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிவிட்டது. மேலும், வித்யாபாலனின் 'ஷகுந்தலா தேவி' படமும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனிடையே, அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்குப் போட்டியாக 7 பிரம்மாண்ட இந்திப் படங்களின் உரிமையைக் கைப்பற்றி டிஜிட்டல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது டிஸ்னி நிறுவனம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று (ஜூன் 29) மாலை 4:30 மணியளவில் நேரலையில் அனைத்துப் படங்களின் நடிகர்களை ஒன்றிணைத்து இதனை அறிவித்தனர்.

அதன்படி, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வெளியாகவுள்ள 7 படங்களின் பட்டியல் இதோ:

லக்‌ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்) - அக்‌ஷய் குமார் நாயகன், கியாரா அத்வானி நாயகி, ராகவா லாரன்ஸ் இயக்கம்.

பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா (1971 இந்தியா - பாக் யுத்தம் பற்றிய படம்) - அஜய் தேவ்கன் நாயகன், உடன் சஞ்சய் தத், சோனாக்‌ஷி, அபிஷேக் துதைய்யா இயக்கம்.

சடக் 2 (1991-ல் வந்த படத்தின் இரண்டாம் பாகம்) - பூஜா பட், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், மஹேஷ் பட் இயக்கம்.

தில் பெசாரா (fault in our stars நாவலின் / ஹாலிவுட் படத்தின் ரீமேக்) - சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகன், சஞ்சனா சங்கி நாயகி, முகேஷ் சாப்ரா இயக்கம். ரஹ்மான் இசை.

பிக் புல் - அபிஷேக் பச்சன் நாயகன், இலியானா, நிகிதா தத் - அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்கும் படம். கூகி குலாடி இயக்கம்.

லூட்கேஸ் - குணால் கெம்மு நாயகன், உடன் கஜ்ராஜ் ராவ், ரசிகா துக்கால், ரன்வீர் ஷோரே, விஜய் ராஸ். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு.

குதா ஹாஃபிஸ் - வித்யுத் ஜம்வால், ஷிவலேகா ஓபராய். ஃபரூக் கபீர் இயக்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்