புகைப்படக் கலைஞரைச் சாடிய தீபிகா படுகோன்; தீபிகாவைச் சாடும் கங்கணா ரணாவத்

By செய்திப்பிரிவு

சுஷாந்த் விவகாரம் தொடர்பாக மீண்டும் களமிறங்கியுள்ளார் நடிகை கங்கணா ரணாவத். இம்முறை அவர் நடிகை தீபிகா படுகோனைச் சாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டத்தை வீடியோ எடுத்த புகைப்படக் கலைஞரை நடிகை தீபிகா படுகோன் விமர்சித்திருந்தார்.

அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த புகைப்படக் கலைஞர், தனது அனுமதியின்றி யாரும் அதை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தீபிகா படுகோன், நீங்கள் மட்டும் சுஷாந்தின், அவரது குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை எடுத்தது அதை வைத்து பணம் சம்பாதிக்கலாமா என்று கேட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில்தான் கங்கணா, தீபிகாவைச் சாடியுள்ளார். இது தொடர்பாக கங்கணாவின் குழு ட்விட்டர் கணக்கில் கூறியிருப்பதாவது:

"தீபிகா படுகோன் யோகேன் ஷாவை (புகைப்படக் கலைஞர்) விமர்சிக்க யோசிக்கவே இல்லை. யோகேன் ஷா இந்தி ஊடகத்தைச் சேர்ந்தவர். கங்கணாவை முடக்காத வெகு சிலரில் ஒருவர். ஆனால் சுஷாந்தின் வீடியோக்களை வைத்துப் பணம் சம்பாதித்த, தீபிகாவின் நண்பர்களான இரண்டு புகைப்படக் கலைஞர்களைப் பற்றி ஏன் தீபிகா பேசவில்லை? அப்போது அவரது மனம் வலிக்கவில்லையா?''

இவ்வாறு கங்கணா ரணாவத்தின் குழு தெரிவித்துள்ளது.

இதோடு விடாமல் தீபிகா படுகோன், மனநலப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக வந்துள்ள ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கும் கங்கணாவின் குழு, அதையும் மறைமுகமாகக் கிண்டல் செய்து கருத்துப் பதிவிட்டுள்ளது. ட்விட்டரில் எப்போதும் போல கங்கணாவின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்