நடிகை ராதிகா ஆப்தே இயக்கிய முதல் குறும்படம், பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் விருது பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 'தி ஸ்லீப்வாக்கர்ஸ்' என்ற குறும்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா நடித்திருந்த இந்தப் படம் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினையைப் பற்றியது. இயக்கம் தனக்குப் பிடித்தது என்றும், தனக்கு மேலும் இயக்கும் வாய்ப்புகள் வரும் என்று நம்புவதாகவும் ராதிகா ஆப்தே கூறியிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச அளவில் கரோனா நெருக்கடியால், பல திரைப்பட விழாக்கள் இணையத்திலேயே நடைபெறுகின்றன. அப்படி குறும்படங்களுக்கென நடந்த ஒரு விழாவில், 'சிறந்த நள்ளிரவுக் குறும்படம்' என்ற விருதை ராதிகா ஆப்தேவின் குறும்படம் வென்றுள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராதிகா, "விழா நடுவர்களுக்கு நன்றி. சிறந்த நள்ளிரவுக் குறும்படம் என்ற விருதை வென்றதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி" என்று தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விழா அமைப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவர்கள் திரைப்படம் வென்ற அறிவிப்பையும் பகிர்ந்துள்ளார்.
» பாக்யராஜ் பையன்ங்கறதுதான் உனக்கு மைனஸ்! - சாந்தனு எடுத்த பேட்டியில் பாக்யராஜ் கருத்து
» ’’இதுதான் பாக்யராஜ் ஸ்டைல்னு சொல்றாங்க!’’ - பேட்டி எடுத்த சாந்தனுவிடம் பாக்யராஜ் ஜாலி ப்ளாஷ்பேக்
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago