சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து 'எம்.எஸ்.தோனி' 2-ம் பாகத்துக்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'சுதேசி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. மேலும், அந்தப் படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் அதன் 2-ம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு வந்தார் தயாரிப்பாளர் அருண் பாண்டே.
தற்போது சுஷாந்த் சிங்கின் மரணத்தால் 'எம்.எஸ்.தோனி' படத்தின் 2-ம் பாகத்துக்கான திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
» காதலியைக் கரம் பிடிக்கும் ‘கும்கி’ அஸ்வின்
» ’’ஏ.எல்.ராகவனுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு அது!’’ - முக்தா சீனிவாசன் மகன் உருக்கம்
'எம்.எஸ்.தோனி' 2-ம் பாகம் குறித்து அருண் பாண்டே கூறுகையில், "சுஷாந்த் சிங் இல்லாமல் 2-ம் பாகம் சாத்தியமில்லை. ஆனால், 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வந்தன. சுஷாந்தும் ஆர்வமாகவே இருந்தார். பெரும் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒரு படத்தினை இழந்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago