ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள புதிய தொடர் ‘ட்ரிபிள் எக்ஸ் -2’. இணையத்தில் வெளியான இத்தொடரில் ராணுவ வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் அந்த காட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் ராணுவ வீரர்களும், தியாகிகள் நல அறக்கட்டளை நிர்வாகிகளும் ஏக்தா கபூருக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக ஏக்தா கபூர் உறுதியுளித்துள்ளார்.
இது குறித்து ஏக்தா கபூர் கூறியுள்ளதாவது:
» ஒரு முதிர்ச்சியான காதல் கதை - தனது புதிய தொடர் குறித்து ஏக்தா கபூர் பெருமிதம்
» ஜேம்ஸ் பாண்டுக்கு மகளா? - இணையத்தில் கசிந்த ‘நோ டைம் டு டை’ கதை
ஒரு தனி நபராகவும், அமைப்பாகவும் ராணுவ வீரர்கள் மீது மிகுந்த மரியாதையை நாங்கள் வைத்துள்ளோம். நம் பாதுகாப்புக்கு அவர்களின் தியாகம் அளப்பரியது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த காட்சியை நாங்கள் ஏற்கெனவே நீக்கி விட்டோம்.
எங்கள் பக்கத்திலிருந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவிட்டது. ஆனால் இதனை காரணமாக வைத்து வரும் மிரட்டல்களையும், கேலிகளையும் எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இவ்வாறு ஏக்தா கபூர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago