பாலிவுட்டின் மூத்த திரைப்பட இயக்குநர் பாஸு சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 93.
பாலிவுட்டின் 70களில் 'சித்சோர்', 'பியா கா கர்', 'கட்டா மீடா', 'பாதோன் பாதோன் மேன்', 'சோடீ ஸீ பாத்', 'ரஜ்னிகந்தா' உள்ளிட்ட பிரபல படங்களை இயக்கியவர் பாஸு சாட்டர்ஜி. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையைத் திரையில் யதார்த்தமாகப் பிரதிபலித்ததற்காக இவரது திரைப்படங்கள் இன்றளவும் பாராட்டப்படுபவை.
93 வயதான பாஸு சாட்டர்ஜி உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில், தூக்கத்திலேயே இன்று காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இன்று காலை தனது தூக்கத்தில் அமைதியான முறையில் பாஸு சாட்டர்ஜி காலமானார். வயது மூப்பின் காரணமாக அவருக்குச் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில் பாஸு சாட்டர்ஜி அவரது இல்லத்தில் காலமானார். திரைத்துறைக்கு இது பெரும் இழப்பு" என்று இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் அமைப்பின் தலைவர் அஷோக் பண்டிட் கூறியுள்ளார்.
» நடிகை மீரா சோப்ராவுக்கு மிரட்டல்: ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு
மும்பை சாண்டாக்ரூஸ் மயானத்தில் பாஸுவின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago