மீண்டும் இணையும் பால்கி - பி.சி.ஸ்ரீராம்

By செய்திப்பிரிவு

6-வது முறையாக இயக்குநர் பால்கி இயக்கவுள்ள படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.

இந்தி திரையுலகில் திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பால்கி. இவர் மிகத் தீவிரமான இளையராஜா ரசிகர். இவர் இயக்கத்தில் 'சீனி கம்', 'பா', 'ஷமிதாப்', 'கி & கா' மற்றும் 'பேட் மேன்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடைசியாக இயக்கிய 'பேட் மேன்' படத்துக்கு மட்டும் அமித் திரிவேதி இசையமைத்திருந்தார். அதை தவிர்த்து இதர படங்கள் அனைத்துமே இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.

மேலும், இவர் பி.சி.ஸ்ரீராமின் நெருங்கிய நண்பர். ஆகையால் இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் பி.சி.ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். இந்த கரோனா ஊரடங்கில் தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பால்கி.

இதிலும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். வீடியோ கால் மூலமாக பால்கி - பி.சி.ஸ்ரீராம் இருவரும் கதை தொடர்பாக பேசியுள்ளனர். வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து பி.சி.ஸ்ரீராம் "ஃபேஸ் டைம் மூலமாக எங்களுடைய அடுத்த படம் குறித்து விவாதித்த போது" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்