‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ அடுத்த சீசன் குறித்து இயக்குநர் நீரஜ் பாண்டே பதிலளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நீரஜ் பாண்டே இயக்கத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான தொடர் ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’. கேகே மேனன், சையாமி கேர், கரண் டேக்கர், திவ்யா தத்தா நடித்த இத்தொடர் 26/11 மும்பை குண்டுவெடிப்பை அடிப்படையாகக் கொண்டது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது சீசன் குறித்து இயக்குநர் நீரஜ் பாண்டே கூறியுள்ளார். இத்தொடரில் நடித்த கரண் டேக்கர் உடனான இன்ஸ்டாகிராம் நேரலையில் நீரஜ் பாண்டே இதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
» வலிமையுடன் ஒரு போராளியைப் போல இருப்பீர்கள்: வனிதா விஜயகுமார் குறித்து மகள் ஜோவிகாவின் பதிவு
» 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக அரசுக்கு விவேக் வேண்டுகோள்
தற்போது இது ஒரு மிகப்பெரிய தொடராக உள்ளது. விரைவில் இன்னொரு தொடர் இதை விட சிறப்பானதாக வரும், அதை விட சிறப்பானதாக இன்னொன்று வரும். அதுதான் இயற்கையின் நியதி.
ஆனால் அவை மக்களுக்கு அவை மிகவும் பிடித்துப் போக வேண்டும், அதுதான் முக்கியம். நாம் இத்தொடரின் அடுத்த சீசனுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதே நம் மேல் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு.
இவ்வாறு நீரஜ் பாண்டே கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago