‘பாபநாசம்’, ‘2.0’, ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆனந்த் மஹாதேவன். இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி பிரபல இயக்குநாக இருப்பவர். இதுவரை இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இவர் ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இவரது புகைப்படத்தை பதிவிட்டு ‘16 முறை தேசிய விருது பெற்ற நடிகர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இறந்துவிட்டார்’ என்று ஒரு செய்தி வைரலாக பரவிவந்தது. இதை உண்மையென்று நம்பிய பலரும் ஆனந்த மஹாதேவனுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வதந்திக்கு ஆனந்த் மஹாதேவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு நடிகருக்கும் தான் வாழும்போதே ஊடகங்களால் மரணம் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய முறை. இதையெல்லாம் யார் தேர்ந்தெடுப்பது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் இதில் எனக்கு பிடித்த விஷயம் அந்த 16 முறை தேசிய விருது தான். என்னிடம் ஏற்கெனவே இரண்டு உள்ளன. இன்னும் நான் 14 விருதுகள் பெறவேண்டும். இதன் அர்த்தம் இதற்காக நான் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே.
» வெள்ளிவிழா நாயகன் மோகனுக்கு பிறந்தநாள்!
» நீங்கள் வளரும் இயக்குநரா? - அப்போ, ஷாரூக்கானின் ‘பேய்ப் பட’ போட்டியில கலந்துக்குங்க
கடந்த காலங்களில் ஏற்கெனவே துரதிர்ஷ்டவசமாக பல மரணங்களை பார்த்துவிட்டோம். எனவே இப்போது எந்த மரணமும் வேண்டாம். இது போன்ற கற்பனை செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.
இவ்வாறு ஆனந்த் மஹாதேவன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
32 secs ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago