பாலிவுட்டின் முன்னணி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் அதிக முறை தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்எம்இ ரஷ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் சராசரியாக பிரியங்கா சோப்ரா 39 லட்சம் முறையும், சன்னி லியோன் 31 லட்சம் முறையும், கேத்ரினா கைஃப் 19 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான் 21 லட்சம் முறையும், ஹ்ரித்திக் ரோஷன் 13 லட்சம் முறையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி 20 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர அதிக முறை தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ஷாரூக் கான், ரோஹித் சர்மா, அல்லு அர்ஜூன், விஜய் தேவரகொண்டா, தோனி, தீபிகா படுகோன், ஆலியா பட், கரீனா கபூர், ராஷ்மிகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
» சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ‘ராக்’ ஜான்ஸன்
» ரசிகருக்கு கரோனா பாதிப்பு: தொலைபேசியில் நலம் விசாரித்த சிம்பு
அதேபோல உலக அளவில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக்காக அதிக பிரபலமடைந்த ட்வீட்களின் பட்டியலில் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரது ட்வீட்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து எஸ்எம்இ ரஷ் நிறுவனத்தின் தொலைத்தொடர்புத் துறை தலைவர் ஃபெர்னாண்டோ ஆங்குலோ கூறியிருப்பதாவது:
''இந்தியப் பெண்கள் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். எங்கள் ஆய்வின் அடிப்படையில் அதிக முறை தேடப்பட்ட இந்தியப் பிரபலம் ஒரு ஆண் இல்லை, ஒரு பெண்தான் என்று தெரியவந்துள்ளது. அவர் பிரியங்கா சோப்ரா. 3 மாதங்களில் சல்மான் கானை விட அதிக முறை தேடப்பட்ட நபராக அவர் ஆகியிருக்கிறார்''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago