அம்பானி குடும்பத்தினர் எங்களைப் பாதுகாத்த தேவதைகள்: நன்றி தெரிவித்த ரிஷி கபூர் மனைவி

By ஐஏஎன்எஸ்

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மனைவி நீது கபூர், ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர் ஏப்ரல் 30-ம் தேதி அன்று காலமானார். கடந்த இரண்டு வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த இரண்டு வருடங்களும் ரிஷி கபூருக்கு ஆதரவாக இருந்ததாக, அம்பானி குடும்பத்தினருக்கு நீது கபூர் நன்றி தெரிவித்துள்ளார்.

"ஒரு குடும்பமாக, கடந்த இரண்டு வருடங்களாக எங்களுடைய பயணம் மிக நீண்டது. நல்ல நாட்களும், மோசமான நாட்களும் கலந்தே இருந்தன. மிகவும் உணர்ச்சிகரமாகவும் அவை இருந்தன என்பதைத் தனியாகக் குறிப்பிடத்தேவையில்லை. ஆனால், அந்தப் பயணத்தை நாங்கள் அம்பானி குடும்பத்தினரின் அளவிட முடியாத அன்பும் ஆதரவும் இன்றி முடித்திருக்க முடியாது.

கடந்த சில நாட்களாக நாங்கள் எங்கள் சிந்தனையில் தொலைந்து போயிருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் எங்களைப் பல முறை பாதுகாத்த அந்தக் குடும்பத்துக்கு எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வது என்பதையும் முயன்று கொண்டிருந்தோம். கடந்த 7 மாதங்களாக, அம்பானி குடும்பத்தில் ஒவ்வொருவரும், தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும், நமது அன்பான ரிஷிக்காக அக்கறை காட்டினர். அவர் எந்த அசவுகரியத்தையும் உணராது பார்த்துக் கொண்டனர்.

அவரை மருத்துவர்கள் ஒழுங்காகக் கவனிக்கிறார்களா என்பதைப் பார்த்துக் கொண்டதோடு, தனிப்பட்ட முறையில் வந்து ரிஷியைப் பார்த்து அவருக்கு அதிக கவனத்தையும், அன்பையும் கொடுத்தனர். நாங்கள் பயந்துபோன சமயங்களில் எங்கள் கைகளைப் பிடித்து ஆறுதலும் சொன்னார்கள்.

சகோதரர் முகேஷ், நீடா. ஆகாஷ், ஷ்லோகா, அனந்த் மற்றும் ஈஷா, இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் எங்களைப் பாதுகாக்கும் தேவதைகளாக இருந்தீர்கள். உங்கள் மீதான எங்கள் அன்பு அளவிடமுடியாதது. நீங்கள் காட்டிய சுயநலமில்லாத, முடிவில்லாத ஆதரவுக்காகவும், அக்கறைக்காகவும், எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி சொல்கிறோம்" என்று நீது கபூர் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பதிவோடு சேர்த்து முகேஷ் மற்றும் நீடா அம்பானியுடன் ரிஷி கபூர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதே புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர், அதனுடன் 'நன்றி' என்று குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்