ரிஷி கபூர் மறைவுக்கு முன்னணி இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி கபூர் மறைவு தொடர்பாக முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்களின் தொகுப்பு:
» இன்று ஒரு சகாப்தம் மறைந்துவிட்டார்: விராட் கோலி புகழாஞ்சலி
» எங்களுடைய உரையாடல்களை எப்போதும் நினைவில் கொள்வேன்: பிரதமர் மோடி புகழாஞ்சலி
ஆமிர் கான்: உயர்ந்த நடிகர்களில் ஒருவரை நாம் இன்று இழந்திருக்கிறோம். அற்புதமான நடிகர், மனிதர். மேலும் நூறு சதவீதம் அவர் சினிமாவின் குழந்தை. எங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொண்டு வந்த அத்தனை மகிழ்ச்சிக்கும் நன்றி. சிறந்த நடிகராக, மனிதராக இருந்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாத குறையை உணர்வோம் ரிஷிஜி.
அக்ஷய் குமார்: நாம் ஏதோ ஒரு கெட்ட கனவுக்கு நடுவில் இருப்பது போலத் தெரிகிறது. ரிஷி கபூர் மறைந்துவிட்டார் என்ற மோசமான செய்தியை இப்போதுதான் கேட்டேன். மனமுடைந்துவிட்டேன். அவர் ஒரு சகாப்தம், அற்புதமான சக நடிகர், குடும்பத்தின் நல்ல நண்பர். அவர் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள், பிரார்த்தனைகள்.
சிரஞ்சீவி: ரிஷிஜி காலமாகிவிட்டார் என்பது தெரிந்து உடைந்துவிட்டேன். உயர்ந்த நண்பர், உயர்ந்த கலைஞர், லட்சக்கணக்கானோரின் அன்புக்குப் பாத்திரமானவர். ஒரு உயர்ந்த மரபைத் தாங்கிக் கொண்டு வந்தவர். அவரது இழப்பைக் கேட்டு மனமுடைந்ததாக உணர்கிறேன். சென்று வாருங்கள் நண்பரே. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
பவன் கல்யாண்: பழம்பெரும் நடிகர் ஸ்ரீ ரிஷி கபூரின் திடீர் மரணம் கேட்டு வருத்தமடைந்துள்ளேன். இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
மகேஷ் பாபு: ரிஷி கபூர் பற்றிக் கேள்விப்பட்டதும் மனமுடைந்துவிட்டேன். சினிமா உலகுக்கு இன்னொரு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு முழுமையான கலைஞர் மற்றும் அற்புதத் திறமை கொண்ட நடிகர். உண்மையான சகாப்தம். ரன்பீருக்கும் அவர் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள், ஆறுதல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ஹன்சிகா: பழம்பெரும் பன்முக நடிகர் ரிஷி கபூரின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். பாலிவுட்டுக்கு இன்னொரு பெரிய இழப்பு. திரைத்துறையில் இன்றைய தினமும், இந்த வாரமும்தான் மிக இருண்ட காலமாக இருக்க வேண்டும். அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் என் ஆறுதல்கள்.
தமன்னா: இதை நம்பமுடியவில்லை. ரிஷி கபூர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் எழுந்தேன். கபூர் குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். உங்கள் இழப்பை உணர்வோம் ரிஷிஜி.
மதுர் பண்டார்கர்: பழம்பெரும் பன்முக நடிகர் ரிஷி கபூரின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டும் அதிர்ச்சியடைந்தேன். திரைத்துறைக்கு இன்னொரு பெரிய இழப்பு. எனக்கு மிகப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர். அவர் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.
அஷ்வின்: நாம் எல்லோரும் இர்ஃபான் கானின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் அதேநேரத்தில் ரிஷி கபூர் மரணத்தால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். இது மிகவும் மோசமான காலகட்டம்.
ராம்சரண்: ரிஷி கபூர்ஜி இறந்துவிட்டார் என்பது தெரிந்து மனமுடைந்துவிட்டேன். இன்று, இந்திய சினிமாவின் இன்னொரு நட்சத்திரம் நம்மைப் பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள்.
மனிஷா கொய்ராலா: நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் இருக்கிறேன். ஏற்றுக்கொள்ளக் கடினமாக உள்ளது. நம் அனைவருக்கும் இன்னொரு இருண்ட தினம். உங்களுடன் பணியாற்றியதும், உங்கள் பரிச்சயம் கிடைத்ததும் ஒரு ஆசீர்வாதம். அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். இந்தக் கடின நேரத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமை தரட்டும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago