உணவு நம் உணர்வு-  பூமி பெட்னேகர்

By ஐஏஎன்எஸ்

நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் உடலை கட்டுக்குள் வைக்க மக்களுக்கு சத்தான உணவுகள் குறித்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

சமச்சீரான வாழ்க்கைப் பாணியைக் கடைபிடிக்க நான் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறேன். நாம் சாப்பிடும் உணவுகளும், ஊட்டச்சத்துக்களும் நமது உடல்நலனில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கு நம் அனைவருக்குமே கடும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இது நம் வாழ்க்கைமுறையை முற்றிலுமாக மாற்றியதோடு மட்டுமல்லாம் நம் உணவு மற்றும் ஊட்டச்சத்தை பெருமளவு கைவிடும் வகையிம் நம் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாம் உண்ணும் உணவு பெருமளவில் நம் உணர்வுகளோடு கலந்திருக்கிறது . இது நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஊரடங்கு காலத்தில் நான் என் ஊட்டச்சத்து பயணத்தை எவ்வாறு மேற்கொள்கிறேன் என்பதை அனைவரிடமும் பகிர விரும்புகிறேன். அவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு வெளியான ‘தம் லகா கே ஹைஷா’ என்ற இந்தி படத்தில் மிகவும் உடல் பருமனான தோற்றத்தில் அறிமுகமான பூமி பெட்னேகர் அடுத்த ஒரு ஆண்டிலேயே உடல் பருமனை முற்றிலுமாக குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்