பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் தாய் சயீதா பேகம் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.
'லைஃப் ஆஃப் பை', 'பிகு', 'லன்ச் பாக்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். இவரது தாய் சயீதா பேகம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் சயீதா, வயது மூப்பின் காரணமாக நேற்று (26.04.20) காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.
இர்ஃபான் கான் மும்பையில் இருக்கிறார். கடும் ஊரடங்கு காரணமாக அவரால் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ காலின் மூலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தனது தாயின் இறுதிச் சடங்கைப் பார்த்து அழுதார் இர்ஃபான் கான்.
இர்ஃபான் கானின் தாய் சயீதா பேகம் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
» டைம் ட்ராவல் படத்தில் நடிக்கும் ‘டெட்பூல்’ ரையான் ரேனால்ட்ஸ்
» ஆன்லைனில் வெளியாகிறதா ‘83’ திரைப்படம்? - ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்
இர்ஃபான் கான் நடிப்பில் ‘அங்க்ரெஸி மீடியம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால் சில நாட்களிலேயே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் மிக விரைவிலேயே அப்படம் ஆன்லைனில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago