நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான மராத்தி படம் ‘சாய்ரத்’. ஆகாஷ் தோசர், ரிங்கு ராஜ்குரு ஆகியோர் நடித்த இப்படம் வசூல ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. ஆணவக் கொலையை அடிப்படையாகக் கொண்ட ‘சாய்ரத்’ இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதுவரை வெளியான மராத்தி மொழிப் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும். இப்படத்தில் புதுமுகங்களாக அறிமுகமான ஆகாஷ் தோசர், ரிங்கு ராஜ்குரு இருவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் ‘ஹன்ட்ரட்’ என்ற இந்தி வெப் சீரிஸில் ரிங்கு ராஜ்குரு நடித்து வருகிறார்.
இது குறித்து ரிங்கு ராஜ்குரு கூறியுள்ளதாவது:
'' ‘ஹன்ட்ரட்’ என்னுடைய முதல் ஆன்லைன் தொடர். இதில் பணிபுரிவது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கிறது. வெப்சீரிஸ்களுக்கு இப்போது அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் இந்த இக்கட்டான சூழலில் நம்மில் பலருக்கு இவைதான் முக்கியப் பொழுதுபோக்காக உள்ளன.
இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹாட் ஸ்டார் போன்ற ஒரு முன்னணித் தளத்தின் மூலம் இத்தொடருக்குப் பரவலான வரவேற்பு கிடைக்கும். என்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு எபிசோடிலும் புதிய பக்கத்தைப் பார்வையாளர்கள் பார்க்கமுடியும். இதுவே என்னை இக்கதாபாத்திரத்தை நோக்கி ஈர்க்கச் செய்தது''.
இவ்வாறு ரிங்கு ராஜ்குரு கூறியுள்ளார்.
இத்தொடரில் லாரா தத்தா, கரண் வாஹி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago