நடிப்பை நிறுத்தச் சரியான நேரம் எது? ரசிகரின் கேள்விக்கு ஷாரூக் கானின் சுவாரசிய பதில்

By செய்திப்பிரிவு

நடிப்பை நிறுத்தச் சரியான நேரம் எது என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ஷாரூக் கான் சுவாரசியமாகப் பதிலளித்துள்ளார்.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜீரோ’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்ததைத் தாண்டி இன்றுவரை ஷாரூக் கான் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

மேலும், கரோனா அச்சுறுத்தலிலும் வீட்டிலேயே தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார். அக்‌ஷய் குமார் கரோனா நிவாரண நிதி அறிவித்தவுடனே, ஷாரூக் கான் எவ்வளவு கொடுக்கவுள்ளார் என்று ட்விட்டரில் தளத்தில் கேள்விகள் எழுந்து, அது ட்ரெண்டானது.

இதனிடையே, இன்று (ஏப்ரல் 20) ட்விட்டரில் நீண்ட நாட்கள் கழித்து #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஷாரூக் கான். நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுடன் உரையாடுவதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.

பலரது கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஷாரூக் கான். இதில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் ட்விட்டர் தளத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. #AskSRK என்ற ஹேஷ்டேகில் ரசிகர் ஒருவர் "வாழ்க்கைச் சக்கரத்தில் சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எது நடிப்பை நிறுத்தச் சரியான நேரம், தொழிலை மாற்ற சரியான நேரம் என்பது, சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது எப்போது, எப்படித் தெரியவரும்?" என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஷாரூக் கான், "எனக்குத் தெரியாது. யாராவது சூப்பர் ஸ்டாரைக் கேட்டுப் பாருங்கள். துரதிர்ஷ்டவசமாக நான் வெறும் ராஜா (King) தான்" என்று தெரிவித்துள்ளார்.

'ஜீரோ' படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்