மீண்டும் அஜய் தேவ்கனுக்கு நாயகியாகும் ரகுல் ப்ரீத் சிங்

By செய்திப்பிரிவு

அஜய் தேவ்கன் இந்திர குமார் இணையும் அடுத்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்திர குமார் அஜய் தேவ்கன் கூட்டணியில் வெளியான படம் ‘டோட்டல் தமால்’. ‘தமால்’ படவரிசையில் மூன்றாவது பாகமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இப்படம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து அஜய் தேவ்கன் - இந்திர குமார் கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது.

‘தேங்க் காட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கனுடன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்துக்கான கதையை கடந்த சில வருடங்களாகவே இந்திர குமார் எழுதி வந்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் மற்றும் டி சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்