கரோனா அச்சுறுத்தல்: 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், 'சூர்யவன்ஷி' படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் 'சிங்கம்' அஜய் தேவ்கன் மற்றும் 'சிம்பா' ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்காக விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, தற்போது கரோனா வைரஸ் பரவி வருவதால், இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட ‘சூர்யவன்ஷி’ ஒரு அனுபவம். அதன் ட்ரெய்லருக்குக் கிடைத்த அமோக வரவேற்பின் மூலம் இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது.

இப்படத்தை உங்களுக்குத் திரையிட மிகுந்த ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தள்ளிவைக்கத் தீர்மானித்துள்ளோம். சரியான தருணத்தில் 'சூர்யவன்ஷி' உங்களிடம் திரும்பி வரும்.

அனைத்தையும் விடப் பாதுகாப்பே முக்கியம். அதுவரை அதே ஆவலுடன் உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு உறுதியாக இருக்க வேண்டுகிறோம். நாம் இதைக் கடந்து செல்வோம்''.

இவ்வாறு 'சூர்யவன்ஷி' படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்