அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: டாப் 10 பட்டியலில் அமிதாப், சல்மான்

By ஐஏஎன்எஸ்

உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் இந்திய நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இடம்பெற்றுள்ளனர்.

அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோர் இந்தப் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு இவர்களின் சம்பளம் சுமார் ரூ.200 கோடி ஆகும்.

இவர்களைத் தொடர்ந்து ஒன்பதாம் இடத்தில் அக்ஷய் குமார் உள்ளார். கடந்த ஆண்டு இவரின் சம்பளம் சுமார் ரூ.195 கோடி ஆகும்.

34 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் ஷாருக் கான் 18வது இடத்திலும், ரன்பீர் கபூர் 30வது இடத்திலும் உள்ளனர். இவர்களின் சம்பளம் முறையே சுமார் ரூ.156 கோடி மற்றும் சுமார் ரூ.90 கோடி ஆகும்.

இந்தப் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சம்பளம் சுமார் ரூ.480 கோடி ஆகும். இரண்டாவது இடத்தில் ஜாக்கி சான் உள்ளார். இவரின் சம்பளம் சுமார் ரூ.300 கோடி ஆகும்.

இப்படி ஒரு பட்டியலை 'ஃபோர்ப்ஸ்' வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும். அதிக சம்பளம் பெறும் நடிகைகள் என்று இதேபோன்றதொரு பட்டியலை இந்த ஆண்டு இறுதியில் வெளி யிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்