பாலிவுட்டின் பிரபல ஒலிப்பதிவு தொழில்நுட்பக் கலைஞர் நிமிஷ் பிளாங்கர் மரணமடைந்தார். அவருக்கு வயது 29.
பாலிவுட் சினிமாவின் பிரபல ஒலிப்பதிவு தொழில்நுட்பக் கலைஞர் நிமிஷ் பிளாங்கர். சல்மான் கான் நடித்த ’ரேஸ் 3’ மற்றும் அக்ஷய்குமார் நடித்த ’ஹவுஸ்ஃபுல் 4’, ’மர்ஜாவன்’, ’பைபாஸ் ரோட்’ ஆகிய படங்களில் ஒலிப்பதிவு தொழில்நுட்பக் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.
29 வயதே ஆன இவர் கடந்த சில நாட்களாக அதீத ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் மும்பையில் இன்று நிமிஷ் பிளாங்கர் மரணமடைந்தார். அவரது மரணம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் நிமிஷ் பிளாங்கரின் திடீர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் சினிமாத்துறையில் வேலைப்பளுவும், அழுத்ததுமே நிமிஷ் பிளாங்கரின் மரணத்துக்கு காரணம் எனவும், வேலை நேரத்தையும், வேலைப்பளுவையும் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த இளம் வயதில் நிமிஷ் பிளாங்கர் இறந்த செய்தி சோகத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago