மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை சற்று தேறியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
லதா மங்கேஷ்கருக்கு இன்டென்ஸிவிஸ்ட் எனப்படும் தீவிர சிகிச்சை நிபுணரான ஃபரூக் இ உத்வாடியா சிகிச்சை அளித்து வந்தர். நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் ‘‘அனைவரின் பிாரர்த்தனையால் லதா மங்கேஷ்கர் உடல்நிலை தேறி வருகிறது. இருப்பினும் அவர் தீவிர கண்காணிப்பில் இருந்து வெளியே கொண்டு வரப்படவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழுமையாக குணமடைய மேலும் சில நாட்கள் ஆகலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago