சிறந்த நடிகருக்கான தேசிய விருது: ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பித்த விக்கி கவுஷல்

By செய்திப்பிரிவு

தனது விருதை எல்லையில் போராடும் ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக நடிகர் விக்கி கவுஷல் தெரிவித்துள்ளார்.

66-வது திரைப்பட தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 419 திரைப்படங்கள் இம்முறை போட்டியிட்டன. 31 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, 'யூரி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' படத்தில் நடித்த விக்கி கவுஷலுக்கு வழங்கப்பட்டது. 'அந்தாதுன்' படத்தின் நாயகன் ஆயுஷ்மண் குரானாவும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விருது கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விக்கி கவுஷல். அவர் பகிர்ந்த பதிவில்,"எனக்கு இப்போது இருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது.

எனது உழைப்பு, பெருமைமிகு தேசிய விருதுகள் நடுவர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனக்கும் எனது குடும்பத்துக்கும் நெகிழ்ச்சியான தருணம். 'யூரி சர்ஜிகல்' ஸ்ட்ரைக் படத்தில் எனது நடிப்புக்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதுக்கு நான் தகுதியானவன் என்று தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நடுவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

ஒரு சக நடிகராக, சக மனிதராக நான் அதிகம் மெச்சும் ஒருவருடன் இந்த விருதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் சகோதரர் ஆயுஷ்மண்.

இந்த விருதை எனது பெற்றோருக்கும், யூரி குழுவின் ஒவ்வொரு நபருக்கும், நமது நாட்டுக்கும், எல்லையில் மழை புயல் பார்க்காமல் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி" என்று விக்கி குறிப்பிட்டுள்ளார்.

'யூரி சர்ஜிகல் ஸ்ட்ரைக்' சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்