எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் சர்வதேச அளவில் ரூ.300 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், இந்த வசூல் தன்னை பயமுறுத்துவதாக பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் கூறியுள்ளார்.
"பாலிவுட்டால் தற்போது பாகுபலியைப் போல் ஒரு படத்தை தர முடியாது. அந்த நிலையை இன்னும் எட்டவில்லை. அதேபோல் அந்த வசூலையும் எட்ட முடியுமா தெரியவில்லை.
என் எண்ணம் தவறென்று நிரூபணமானால் நல்லதுதான். ஆனால் கண்டிப்பாக இப்படியான வசூல் என்னை பயமுறுத்துகிறது. பாகுபலி அத்தகைய சிறந்த திரைப்படம்" இவ்வாறு சல்மான் பேசியுள்ளார்.
ஜூலை 10-ஆம் தேதி வெளியான பாகுபலி 9 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. படத்தின் இந்தி டப்பிங் பதிப்பு மட்டுமே ரூ. 50 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த வெள்ளி சல்மான் கானின் பஜ்ரங்க பைஜான் திரைப்படத்தின் வெளியீடும் பாகுபலி வசூலை பெரிதாக பாதிக்கவில்லை என பாக்ஸ் ஆஃபிஸ் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago