சீனாவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய முதல் இந்திய திரைப்படம் பிகே: சிறந்த நகைச்சுவை திரைப்படம் என பாராட்டு

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடித்துள்ள பிகே திரைப்படம், சீனாவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவில் ஹாலிவுட் திரைப் படங்களும் உள்நாட்டு திரைப் படங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுதவிர, இந்திய, கொரிய மற்றும் ஜப்பானிய திரைப்படங்களும் கணிசமாக அங்கு திரையிடப்படுகின்றன.

இந்நிலையில், ஆமிர் கான் நடித்துள்ள பிகே திரைப்படம் சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் மே 22-ம் தேதி 1,200-க்கும் மேற் பட்ட தியேட்டர்களில் வெளியிடப் பட்டது.

கடந்த 3 வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டி ருக்கும் இந்தப் படம் மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீன மொழியில் டப் செய்யப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் வசூல், சீனாவில் மட்டும் இதுவரை ரூ.100 கோடி யைத் தாண்டி உள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு இந்தப் படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் வாங் ஜியாவ்னன் என்பவர் எழுதிய கட்டுரையில், “சீனாவின் மிகப் பெரிய திரைப்பட விமர்சன இணையதளங்களில் ஒன்றான தவுபன், இந்தியாவின் பிகே திரைப்படத்துக்கு 8.3 புள்ளிகளை வழங்கி உள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை இல்லாத வகை யில் ரூ.636 கோடி வசூலை குவித்துள்ள இந்தத் திரைப்படம், சீன மக்களின் பேராதரவையும் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் அல்லது சீன திரைப் படங்களைத் தவிர மற்றவை வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டுவது மிகவும் அரிது என்று அந்நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை சீனா வில் வெளியிட்டுள்ள என்பி ஆர்ஜி நிறுவனத்தின் பிரசாத் ஷெட்டி கூறும்போது, “அமெரி்க்கா, பிரிட்டனைப் போல சீனாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் இல்லை. இந்நிலையில், இந்திய திரைப்படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE