உலகின் பணக்கார நடிகர்கள்: ஷாரூக்கான் 2-வது இடம்- ரூ.3,500 கோடி சொத்துடன் டாம்குரூஸை முந்தினார்

By செய்திப்பிரிவு

உலகின் முதல் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் இந்தியாவின் ஷாரூக் கான் 2-ம் இடம் பிடித்துள்ளார். ஹாலிவுட் பிரபல நடிகர்கள் டாம் குரூஸ், ஜானி டெப் ஆகியோரை ஷாரூக் கான் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் முதல் 10 பணக்கார நடிகர் களை கார்டியன் வரிசைப்படுத்தி யுள்ளது. 2013-ம் ஆண்டு நிலவரப்படி இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி செய்ன்பெல்டு முதலிடம் பிடித்துள்ளார்.

இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 4,792 கோடியாகும். இரண்டாவது இடத்தில் ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 3,500 கோடியாகும். 2013-ம் ஆண்டு மட்டும் சுமார் ரூ. 250 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

48 வயதாகும் ஷாரூக் கான் மட்டும்தான் முதல் 10 பணக் கார நடிகர்கள் வரிசையில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகராவார்.

கடந்த 20 ஆண்டுகால திரை வாழ்க்கையில் ஷாரூக் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் பல பெரும் வெற்றி பெற்றுள்ளன. அவரின் கடைசியாக வந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை புரிந்தது.

ஷாரூக்கானின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவு, நோக்கியா, பெப்ஸி, டேக் ஹியூயர் போன்ற பிரபல நிறுவனங்களுடன் மேற்கொண்ட விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் பெறப்பட்டதாகும். ஸ்பைஸ் நிறுவனத்துடன் விளம்பரத்துக்காக அவர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவருக்கு மேலும் ரூ. 20 கோடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கட்டிட அலங்கார நிபுணர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கவுரி சிப்பரை ஷாரூக் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு மும்பை, டெல்லி, துபை மற்றும் லண்டனில் வீடுகள் உள்ளன.

பணக்கார நடிகர்கள் பட்டியலில் டாம் குரூஸ் சுமார் ரூ. 2,805 கோடியுடன் 3-வது இடத்திலும், சுமார் ரூ.2630 கோடி சொத்துடன் ஜானி டெப் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்