மக்களின் எண்ணங்களை பரிசீலிக்க எப்போதும் முயற்சிப்போம்: திரைப்பட தணிக்கைத் துறைத் தலைவர்

படங்களின் தணிக்கையின் போது மக்களின் எண்ணங்களை பரிசீலிக்க முயற்சிப்போம் என திரைப்பட தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார்.

இதுவரை பஹ்லஜ் நிஹ்லானி தணிக்கைத் துறை தலைவராக செயலாற்றி வந்தார். தற்போது, பாடலாசிரியரும், விளம்பரப்பட இயக்குநருமான ப்ரஸூன் ஜோஷி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ப்ரஸூன் ஜோஷி பாக் மில்கா பாக் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியவர். தாரே ஸமீன் பர், சிட்டகாங்க் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக தேசிய விருதினைப் பெற்றவர். பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான பாடலையும் எழுதியுள்ளார்.

புதிதாக அளிக்கப்பட்டுள்ள பொறுப்பைப் பற்றி ஜோஷி பேசுகையில், "திரைத் துறையில் என்மீது எதிர்பார்ப்புகள் இருப்பதில் எனக்கு சந்தோஷமே. எனக்கு துறை மீதி மதிப்புள்ளது. தணிக்கை செய்கையில், சரியான, நேர்மறையான மக்களின் எண்ணைங்களை கண்டிப்பா எடுத்துக்கொள்ள எப்போதும் முயற்சிப்பேன்.

எனக்கு தணிக்கை துறை பற்றியோ, அதன் தலைவரான எனது செயல்பாடு பற்றியோ இப்போது எதுவும் தெரியாது. ஆனால் எனக்கு விவேகமுள்ளது. பொறுப்புகள் ஏற்பதில் நம்பிக்கை உள்ளது. நான் எப்போது தன்னம்பிக்கை உடையவனாக இருந்திருக்கிறேன். நமது வேலையை பொறுப்பாக செய்ய வேண்டும். யாரையும் விமர்சிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எனத் அனுபவம் மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டு, என்னால் முடிந்தவரை சிறப்பாக நான் என் பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன். என்னுடன் இணையும் அனைத்து நல்ல நபர்களும் மாற்றத்தைத் தருவார்கள். எல்லோரும் சேர்ந்துதான் அதை செய்ய வேண்டும். முதலில் அனைவருக்குள்ளும் ஒரு புரிதல் முதலில் வர வேண்டும். அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நடிகைகள் வித்யா பாலன், கவுதமி, ஜீவிதா ராஜசேகர், கதாசிரியர் மிஹிர் புதா, எழுத்தாளர்கள் நரேந்திர கோலி, ரமேஷ் படாங்கே, இயக்குநர்கள் நரேஷ் சந்த்ர லால், விவேக் அக்னிஹோத்ரி, நாகபரணா, இசைக்கலைஞர் நீல் ஹெர்பர்ட், நாடகக் கலைஞர் வாமன் கெண்ட்ரே, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் வாணி த்ரிபாதி உள்ளிட்டோரும் மாற்றியமைக்கபட்ட தணிக்கைத் துறையின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE