'டியூப்லைட்' படத்தினை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க சல்மான்கான் முடிவு செய்துள்ளார்.
கபீர்கான் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் 'டியூப்லைட்'. ஜூன் 23-ம் தேதி வெளியான இப்படத்தை சல்மான்கான் மற்றும் கபீர்கான் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.
இப்படம் வெளியான நாள் முதலே, மோசமான விமர்சனங்களைப் பெற்று தந்தது. மேலும், மக்களிடமும் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ச்சியாக வசூலும் இறங்கு முகத்திலேயே இருந்தது. சமீபத்தில் வெளியான சல்மான்கான் படங்களில் படுதோல்வியை சந்தித்த படம் என்று பாலிவுட் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், 'டியூப்லைட்' படத்தை வாங்கி விநியோகித்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு, பணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார் சல்மான்கான். இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளார்கள். இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பாலிவுட் வர்த்தக நிபுணர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலு
'டியூப்லைட்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில், விமர்சகர்களை கடுமையாக சாடினார் சல்மான்கான். மேலும், "எனது ரசிகர்கள் எப்படியும் என் படத்தைப் பார்ப்பார்கள். அதுதான் எனக்கு கிடைக்கும் வெகுமதி" என்றும் குறிப்பிட்டிருந்தார் சல்மான்கான்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago