தோல்வியை கண்டாலே பயம் : ஷாருக்கான்

By செய்திப்பிரிவு

எனக்கு எப்போதுமே தோல்வியை கண்டால் பயம் என்று கூறியுள்ளார் ஷாருக்கான்.

பாக்ஸ் ஆபிஸின் அனைத்து சாதனைகளையும் தாண்டி, எந்த ஒரு இடத்திலும் நிற்காமல் சென்றுக் கொண்டிருக்கும் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'.

ஷாருக்கான், தீபிகா நடித்த அப்படத்தினை இயக்கியிருந்தார் ரோஹித் ஷெட்டி. இப்படம் 140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது.

AIMA (All India Management Association) நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான் “எனக்கு தோல்வியைக் கண்டாலே பயம். இரண்டாவதாக வருவதும் பயம், மிகப்பெரிய வெற்றி அமையாவிட்டால் மிகவும் பயந்துவிடுவேன்.

என் முந்தைய வெற்றிகளை நான் நினைத்து கொண்டே இருப்பதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் ஒரே நாளில் போய்விடும். அந்த பயத்தில் தான் அவசியமில்லால் விட்டாலும் கூட நான் மிகக் கடுமையாக உழைக்கிறேன்.

தோல்வியின் மூலம் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன். 'Ra.One' படத்தின் போது இருந்த பல நண்பர்கள் இப்போது என்னுடன் இல்லை. அப்படத்தின் தோல்வியால் பல நண்பர்களை இழந்தேன். 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு நான் எந்த புதிய நண்பரையும் சேர்த்து கொள்ளவில்லை.

எந்த ஒரு புதிய படத்தினை ஒப்புக்கொண்டாலும், அப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒரு புதுமுக நடிகராக தான் போகிறேன். எனது கடைசி படமாக நினைத்து, கடுமையான உழைப்பை முழுவதும் படத்திற்கு அளித்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.

ஷாருக்கான் தற்போது ஃபாரா கான் இயக்கத்தில் 'Happy Anniversary' படத்தில் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்