பாகுபலியில் நானும் நடித்திருக்கலாம்: அமிதாப் பச்சன் ஏக்கம்

By ஐஏஎன்எஸ்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாகுபலி' படத்தின் முதல் பார்வையை பார்த்த பாலிவுட் நடத்திரம் அமிதாப் பச்சன், ''நானும் இந்தப் படத்தில் நடித்திருக்கலாம்'' என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் காட்சிகளின் தரத்தை அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் புகழ்ந்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாகுபலி' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இந்தி உரிமையை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் வாங்கியுள்ளார்.

படத்தின் நாயகர்களில் ஒருவரான ராணாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமிதாப் பச்சன், "இத்தகைய படத்தின் முன்னால் நான் மிகச் சிறியவனாக உணர்கிறேன். அப்படி ஒரு முயற்சி இது. இப்படியொரு படத்தை இந்திய சினிமா உலகம் கண்டிருக்குமா எனத் தெரியவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றின் உருவாக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

இப்படியான காட்சிகளை ஒரு சில ஹாலிவுட் படங்களில் மட்டுமே காண முடியும். அதை இந்தியாவில் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்படி ஒரு துறையில் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நானும் இந்தப் படத்தில் நடித்திருக்கலாமே என இப்போது ஏங்குகிறேன்"

இவ்வாறு அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்