மீண்டும் இணையும் சுபாஷ் கை - சல்மான் கான்!

By ஸ்கிரீனன்

இயக்குநர் சுபாஷ் கை மற்றும் நடிகர் சல்மான் கான் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சுபாஷ் கை இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் 'யுவராஜ்'. இப்படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்தினைத் தொடர்ந்து இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை.

தற்போது சுபாஷ் கை மீண்டும் சல்மான் கானை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து, “சல்மான் கானும் நானும் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியிருக்கிறது. நிறைய படங்கள் தற்போது அவர் நடித்து வருகிறார்.

நானும் அவரும் உடகார்ந்து பேச வேண்டும். எனது அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார்.

சல்மான் கான் எனது ‘ஹீரோ’ படத்தின் ரீமேக்கை தயாரிக்கவிருக்கிறார். ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் மற்றும் சுனில் ஷெட்டியின் மகள் ஆதித்யா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

சல்மான் கான் எனது குடும்ப நண்பர். எனது படத்தினை ரீமேக் செய்ய வேண்டும் என விரும்பினார். செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். நான் நீங்கள் படத்தினை ரீமேக் செய்யுங்கள். அது எளிது என்று கூறிவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்