என் படமல்ல.. எங்க படம் : ஷாருக்கான்

By ஸ்கிரீனன்

'ஹேப்பி நியூ இயர்' படம் என்னுடைய படமெல்ல என்று தெரிவித்திருக்கிறார் ஷாருக்கான்.

'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தினைத் தொடர்ந்து ஷாருக்கான் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'ஹேப்பி நியூ இயர்'. ஃபாரா கான் இயக்கி வருகிறார்.

2007ல் வெளியான 'ஓம் சாந்தி ஓம்' படக்கூட்டணியான ஷாருக்கான் - தீபிகா படுகோன் - ஃபாரா கான் மூவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'ஹேப்பி நியூ இயர்'.

இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. அடுத்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது 'ஹேப்பி நியூ இயர்'.

இப்படம் குறித்து ஷாருக்கான், “'ஹேப்பி நியூ இயர்' படம் போன்று இதற்கு முன்பு நான் நடித்ததில்லை. இது என்னை மட்டுமே சார்ந்த படமல்ல. இது பல நட்சத்திரங்களின் சங்கமம்.

தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், போமன் இரானி, ஜாக்கி ஷெராஃப், விவான் ஷா, சோனு தூத் என ஒரு பெரிய கூட்டணியே இப்படத்தில் நடித்து வருகிறோம். இம்மாதிரி ஒரு பெரிய கூட்டணியில் நான் நடிக்கும் முதல் படம் 'ஹேப்பி நியூ இயர்'.

இப்படத்தின் புதுமை என்றால், இது நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தும் படமாக இருக்காது.” என்று தெரிவித்திருக்கிறார்.

உலகம் முழுதும் ரசிகர்களைக் கொண்ட ஒரு பிரபல நாயகன், இப்படி தெரிவித்திருப்பது பாலிவுட்டில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ‘ சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தன் பெயருக்கு முன்னால் தீபிகா படுகோன் பெயரைப் போடும்படி செய்திருந்தார் ஷாருக் கான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்