தனுஷுடன் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதி செய்தார் அக்ஷரா ஹாசன்.
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவரின் தங்கை அக்ஷராஹாசன் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
அவ்வப்போது, அக்ஷராஹாசன் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தாலும், 'இப்போதைக்கு இல்லை' என்று மறுத்து வந்தார்.
இந்நிலையில், பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மூவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தியினை தனுஷ், தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்தார்.
தனுஷ் ட்விட்டர் தளத்தில் அறிவித்த செய்தியில் கூட, அக்ஷராஹாசன் நடிக்கவிருப்பதை உறுதி செய்யவில்லை. இதனால் அக்ஷராஹாசன் நடிக்க இருக்கிறாரா.. இல்லையா என்பதில் சந்தேகம் நிலவியது.
தற்போது அக்ஷராஹாசன் தனுஷ், அமிதாப்புடன் தான் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார். " தனுஷ், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பால்கி இயக்கத்தில் நடிக்கவிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இப்படம் மிகப்பெரிய கற்றுக்கொள்ளக் கூடிய அனுபவமாக இருக்கும்.." என்று தெரிவித்திருக்கிறார்.
பால்கி இயக்கவிருக்கும் இப்படம் 2014ல் தான் துவங்குகிறது. தனுஷ், அமிதாப், அக்ஷராஹாசன், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், பால்கி இணைந்திருக்கும் இப்படத்திற்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
10 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago