'தங்கல்' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் ஓப்பிட வேண்டாம் என்று ஆமிர்கான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
உலக அளவில் 'பாகுபலி 2' பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதுவரை ரூ.1565 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால், ஆமிர்கானின் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படம் சீனாவில் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. அங்கு ரூ.750 கோடி வசூலை கடந்து, அப்படமும் ரூ.1500 கோடி வசூலை எட்டியுள்ளது.
இரண்டு படங்களுமே உலக அளவில் இந்திய சினிமாவை பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது என்று பாலிவுட் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு 'சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. அந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆமிர்கான் பேசும் போது, "சீனா மட்டுமன்றி உலகளவில் 'தங்கல்' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் மகழ்ச்சி. ஆனால் இரண்டு படங்களையும் ஒப்பிடுவது தேவையற்றது.
நான் இன்னும் 'பாகுபலி 2' பார்க்கவில்லை. ஆனால் அப்படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் வெற்றிகரமான படம் 'பாகுபலி 2'.
இரண்டுமே படங்களுமே அந்தந்த களங்களில் சிறந்த படங்கள். இரண்டுமே இந்தியப் படங்களாக உருவாகி, நமது நாட்டை பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது. உலக அளவில் 'பாகுபலி 2'வின் வெற்றியால், ஒரு இந்திய ரசிகனாக பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஆமிர்கான்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago