திருமண வாழ்க்கைக்கு உண்மையும் விட்டுத்தருவதும் முக்கியம்: சன்னி லியோன் பேட்டி

வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு உண்மையும், விட்டுக்கொடுத்தலும் தான் முக்கியம் என்கிறார் நடிகை சன்னி லியோன்.

திரையுலக நட்சத்திர தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகள் எழுவது சகஜம். இந்த வருடம் பாலிவுட்டில், இரண்டு ஜோடிகள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ள நிலையில், சன்னி லியோன் தன்னுடைய திருமண வாழ்வின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

2009-ல் டேனியல் வெபரைத் திருமணம் செய்துகொண்டார் சன்னி லியோன். அவர் சினிமா, திருமண வாழ்க்கை குறித்துப் பேசியதாவது:

வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு என்ன தேவை?

திருமண வாழ்க்கைக்கு முக்கியம் உண்மை பேசுவதும், விட்டுக்கொடுப்பதுதான். 'மகிழ்ச்சியான மனைவி இருந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும்' என்ற கூற்றை நம்புகிறேன். ஆனால் அதைத் தாண்டி, விட்டுக்கொடுப்பது, எல்லையில்லாத அன்பு, மனம் விட்டுப் பேசுவது, உண்மையாய் இருப்பது ஆகியவையும் முக்கியம்.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்காமல் சில விஷயங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். அதுதான் முக்கியத்தேவை.

2012-ல் வெளியான ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நீங்கள், சினிமா துறையில் அந்நியன் போல உணர்வதாகக் கூறினீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

எல்லாத் துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். சில நல்ல மனிதர்களை இங்கு சந்தித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

தற்போது ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாருக் கானுடன், ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறீர்கள். அந்தப்பாடல் 1980-ல் வெளியான குர்பானி படத்தின் லைலா ஓ லைலா பாடலை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் ஃபெரோஸ் கானும், ஜீனத் அமனும் நடித்திருப்பார்கள். இப்போது ஷாரூக்குடனான உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?

என்னுடைய கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அவருடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஷாரூக்கானுடன் நாயகியாக நடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

படங்களின் தோல்வி உங்களை வருத்தமடையச் செய்யுமா?

கண்டிப்பாக. ஒரு படத்தில் வேலை பார்க்கும்போது முழு மனதோடுதான் பணிபுரிகிறோம். படம் சரியாகப் போகாமல், தோல்வி அடைந்தால் கண்டிப்பாய் அது என்னை பாதிக்கும்.

திரைப்படங்களில் நடிப்பது தவிர?

இளைஞர்கள் சம்பந்தமான உண்மைச் சம்பவத் தொகுப்பான எம்டிவியின் 'ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 9'-ஐ தொகுத்து வழங்க இருக்கிறேன். என்னுடன் ரண்விஜய் சின்ஹாவும் இணைந்துள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் வாழ்க்கையின் உண்மைத் தன்மையை வெளிக்காட்டுகின்றன.

முந்தைய 'ஸ்பிளிட்ஸ்வில்லா' நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு இடையே நடந்த வார்த்தைப் பூசல்கள் குறித்து?

மனிதர்கள் திடீரென்று வருத்தப்படுவார்கள்; கோபப்படுவார்கள். அவர்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால்தான் அவற்றைப் பார்க்கிறோம். இப்போது அடுத்தவரின் வாழ்க்கை அதைவிட சுவாரஸ்யமாக இருப்பதால் ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கிறோம். நானும் ரண்விஜய்யும் நிகழ்ச்சிகளில் தனிமனித தாக்குதல்களை அனுமதிக்கப் போவதில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வோம்.

தமிழில்:ரமணி பிரபா தேவி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்