4 நாட்களில் 100 கோடி : க்ரிஷ் 3

By ஸ்கிரீனன்

ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் 'க்ரிஷ் 3', முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 100 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

ரித்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, விவேக் ஒபராய், கங்கனா ராவத் மற்றும் பலர் நடிக்க ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கியிருந்தார். 'க்ரிஷ்' பட வரிசையில் வெளிவரும் மூன்றாம் பாகம் என்பதால் பெரும் இந்தியளவில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

படமும் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்தியளவில் பல்வேறு சாதனைகளை இப்படம் செய்திருக்கிறது.

வெள்ளி - 25.5 கோடி, சனி - 23 கோடி, ஞாயிறு - 24.3 கோடி, திங்கள் - 35.91 கோடி என முதல் நான்கு நாட்களில் 108.71 கோடி இப்படம் வசூல் செய்திருக்கிறது.

ஒரே நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' சாதனையை முறியடித்திருக்கிறது. திங்களன்று இந்தியாவில் மட்டும் 35.91 கோடி வசூல் செய்திருக்கிறது.

படத்தின் டிக்கெட் புக்கிங்கிற்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும் போது செவ்வாய் கிழமை வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளதால், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்