மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!

By செய்திப்பிரிவு

'Happy Anniversary' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்குகிறார் ஐஸ்வர்யா ராய்.

அபிஷேக் பச்சனுடன் திருமணான பின், நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு, புதிய படங்கள் எதையுமே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் ஐஸ்வர்யா ராய்.

மகள் ஆராதயா பச்சன் பிறந்த பிறகும் கூட எந்த ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது பிரஹலாத் காக்கர் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

'Happy Anniversary' படத்தின் தயாரிப்பாளர் தோஷி “ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக கடுமையாக உடலமைப்பினை மாற்றி வருகிறார். உடல் எடையை குறைத்து, 'தூம்' படத்தில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் போலிருப்பார் .

பச்சன் குடும்பத்தினருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஆனால் இப்படத்தின் கதை தான் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரையும் சம்மதிக்க வைத்தது. பெரும்பாலான காட்சிகளை தென்னாப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்கத் தொடங்கிருப்பதால், பல்வேறு இயக்குநர்கள் அவரது வீட்டிற்கு படையெடுக்க தொடங்கிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்