இந்தி நடிகர் பாரூக் ஷேக் காலமானார்

By ஸ்கிரீனன்

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் பாரூக் ஷேக் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

‘Garm Hava’, ‘Shatranj Ke Khiladi’, ‘Chashme Buddoor’, ‘Yeh Jawaani Hai Deewani’,’Kissi Se Na Kehna’ உள்ளிட்ட பல இந்திப் படங்களில் நடித்தவர் பாரூக் ஷேக். படங்களில் நடிப்பது மட்டுமன்றி பல்வேறு டிவி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த போது, மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது.

2013ல், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘Yeh Jawaani Hai Deewani’ படத்தில் ரன்பீர் கபூருக்கு அப்பாவாக நடித்தார். ஜீ தொலைக்காட்சியில் புகழ்பெற்ற “Jeena issi ka naam hai” என்ற டாக் ஷோ மூலம் பல்வேறு இந்தி திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்தவர் பாரூக் ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரூக் ஷேக் மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்