அகில இந்திய விளம்பரங்களில் பளிரென்ற சிரிப்புடன் ரசிகர்களுக்கு இன்றும் புத்துணர்ச்சி தருபவர் கஜோல். இவரது காதல் கணவர் அஜெய்தேவ்கனுக்கு தற்போது ’மாற்றுத்திரைப்படங்கள்’ மீது காதல் பிறந்திருக்கிறது. பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் பொதுவாக வணிகம் சார்ந்த திரைப்படங்களுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றன. வாழ்வில் அன்றாடம் எதிர்படும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களைத் தயாரிப்பதில் வணிகரீதியான சிக்கல் இருப்பதாக அந்த நிறுவனங்கள் கருதுவதும் இதற்கு காரணம்.
சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென் போன்றோரின் முயற்சியில் முன்பு ‘பேரலல் சினிமா’ என்ற வகை கலைப்படைப்புகள் உருவாகி, இந்திய சினிமாவின் நிறத்தை மாற்றின. அந்த மாற்றுமுயற்சியும் குறைந்து வணிகப்படங்களே அதிக அளவில் தயாரிக்கப்பட்டன . ஒரு இடைவெளிக்குப் பின்னர், வணிக சமரசங்கள் இல்லாமல் செறிவான படங்களைத் தயாரிக்க, திரைப்படம் மீது காதலும் கையில் கொஞ்சம் பணமும் உள்ளவர்கள் முன்வந்தனர்.
‘ஹைதராபாத் ப்ளூஸ்’ படத்தைத் தயாரித்து இயக்கிய நாகேஷ் குக்குனூர் ஒரு உதாரணம். கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு அமெரிக்காவில் வேலைபார்த்துவந்த நாகேஷ், தனது சேமிப்புப் பணத்தைக் கொண்டு 17 நாட்களில் ‘ஹைதராபாத் ப்ளூஸ்’ படத்தை உருவாக்கினார். திரைப்பட விழாக்களில் அந்தப் படம் கவனம் பெற்ற பின்னர், பாலிவுட்டின் பிரபல நடிகர்களை வைத்து பெரிய நிறுவனங்களின் தயாரிப்பில் ‘8 பை 10 தஸ்வீர்’ போன்ற படங்களை அவரால் இயக்க முடிந்தது. எனினும், ‘டோர்’, ‘இக்பால்’ போன்ற பரிசோதனைப் படங்களையும் அவர் உருவாக்கினார். தற்போது வணிகத்திரையின் குறுக்கீடுகள் இன்றி இயக்குனர்களின் முழுமையான கற்பனைக்கும், ஆளுமைக்கும் இடமளிக்கும் இண்டிபெண்டெண்ட் வகைப்படங்கள் பெருகி வருகின்றன.
இண்டிபெண்டெண்ட் படங்களுக்குச் சமீபத்திய உதாரணங்களாக, ‘லஞ்ச் பாக்ஸ்’, ‘ஷிப் ஆப் தீசியஸ்’ போன்றப் படங்களைக் குறிப்பிடலாம். வழக்கமான கதைசொல்லல் பாணியிலிருந்து முற்றிலும் விலகிய இப்படங்கள் கவனம் பெற, வணிகப் படங்களில் இயங்குபவர்கள் அளித்த ஆதரவும் ஒரு காரணம் என்பது கவனிக்கத்தக்க விஷயம். அமீர் கானின் மனைவியும் இயக்குனருமான கிரண் ராவ், தயாரிப்பாளர் கரன் ஜோகர் போன்றவர்கள் இந்தப் படங்கள் திரையரங்குகளைச் சென்றடைய உதவியிருக்கின்றனர். இப்படியான ஒரு சூழலில், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் மாற்றுத் திரைப்படங்களுக்கு ஆதரவு தரத் தயார் என்று அஜய் தேவ்கன் தனது ‘மாற்று சினிமா காதலை’ வெளிப்படுத்தியிருக்கிறார் அவரது இந்த அறிவிப்பு மாற்றுத் திரைப்படங்கள் மீதான மாஸ் நட்சத்திரங்களின் பார்வையில் நல்ல மாற்றம் வந்திருப்பதைக் காட்டுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago