ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் 3 இடியட்ஸ்

By ஸ்கிரீனன்

ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' திரைப்படம், 37வது ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

'3 இடியட்ஸ்’ ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளிவந்தது. இந்தியாவில் உள்ள கல்வி நிலையை முன்னிறுத்தியது. விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது.

'3 இடியட்ஸ்' திரைப்படம் 2009ல் வெளியானாலும், 2013ல் தான் ஜப்பான் நாட்டில் வெளியானது. ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலில் '3 இடியட்ஸ்' படமும் இடம்பெற்று இருக்கிறது.

ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலின் இணையத்தில் 'I'm Sure, Go Well' என்ற பெயரில் இப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்துடன் 'Captain Phillips', 'Django Unchained', 'Gravity' உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 7ம் தேதி டோக்கியோவில் உள்ள க்ராண்ட் பிரின்ஸ் ஹோட்டலில் 37வது ஜப்பான் அகாடமி விருதுகள் நடைபெறவிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE