தமிழ், இந்தி என இருமொழிகளில் தயாராகும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் அரவிந்த்சாமி.
ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களில் நடித்தவர் நடிகர் அரவிந்த்சாமி. 'கடல்' படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படம் படுதோல்வியைச் சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி, பல்வேறு மொழி கதைகளை கேட்டு வந்தார். ஆனால், எந்த ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது இந்தி மற்றும் தமிழில் தயாராகும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். மராத்தியில் வெளிவந்த 'காக்ஸ்பார்ஸ்(Kaksparsh)' படத்தின் ரீமேக் இது.
மராத்தி படத்தினை இயக்கிய மகேஷ் மஞ்சுரேகர், தமிழ் - இந்தி ரீமேக்கையும் அரவிந்த்சாமியை வைத்து இயக்கவிருக்கிறார்.
2000ல் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான 'ராஜா கோ ராணி சே பயார் ஹோ கயா'வைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் இந்தி படம் இது.
இது பிராமண விதவைக்கும் அவளது புரட்சிகர மாமனாருக்குமிடையில் இருக்கும் உறவைச் சொல்லும் படம்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago