ட்விட்டரில் 70 லட்சத்தினை கடந்த அமிதாப்!

By ஸ்கிரீனன்

ட்விட்டர் தளத்தில் 70 லட்சம் ஃபாலோயர்ஸை கடந்துள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன்.

இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் ட்விட்டர் தளத்தில் தங்களுக்கான பிரத்யேக கணக்கை ஆரம்பித்து, அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், தனக்கான ட்விட்டர் தளத்தில் 70 லட்சம் ஃபாலோயர்ஸை (Followers) கடந்திருக்கிறார். அவர் ட்விட்டர் தளத்தில் வெளியிடும் ஒவ்வொரு தகவலும் 70 லட்சம் பேரை சென்றடையும்.

தினமும் அவருடைய பணிகள் பற்றிய கருத்துகள், நடித்து வரும் படங்கள் பற்றிய குறிப்புகள் என தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர் அமிதாப் பச்சன்.

இன்று அவருடைய ட்விட்டர் தளத்தின் ஃபாலோயர்ஸ், 70 லட்சம் தாண்டியதைத் தொடர்ந்து, "அனைவருக்கும் நன்றி. எனது ட்விட்டர் தளத்தில் இப்போது 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்" என்று ட்விட்டியுள்ளார்.

இதுவரை அமிதாப் பச்சன் 26, 856 தகவல்களை ட்விட்டியுள்ளார். 840 பேரை தனது ட்விட்டர் தளம் மூலம் அமிதாப் ஃபாலோ செய்கிறார்.

ட்விட்டர் தளம் மட்டுமன்றி, அமிதாப் ஒரு தொடர்ச்சியான வலைப்பதிவாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்